/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆங்கிலேயர் கால முதல் கட்டடம் ; அரசு கலை கல்லுாரியாக மாறி 70 ஆண்டுகள் ஆங்கிலேயர் கால முதல் கட்டடம் ; அரசு கலை கல்லுாரியாக மாறி 70 ஆண்டுகள்
ஆங்கிலேயர் கால முதல் கட்டடம் ; அரசு கலை கல்லுாரியாக மாறி 70 ஆண்டுகள்
ஆங்கிலேயர் கால முதல் கட்டடம் ; அரசு கலை கல்லுாரியாக மாறி 70 ஆண்டுகள்
ஆங்கிலேயர் கால முதல் கட்டடம் ; அரசு கலை கல்லுாரியாக மாறி 70 ஆண்டுகள்
ADDED : ஜூன் 15, 2025 09:32 PM

ஊட்டி; ஊட்டியில், 18ம் நுாற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கட்டடம், காமராஜர் காலத்தில் அரசு கலை கல்லுாரியாக மாற்றப்பட்டு இன்று, 70 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன், லண்டனைபோல் ஊட்டி இருப்பதை அறிந்தார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உள்ளதைபோல் பாரம்பரிய கட்டடங்களை கட்ட முடிவு செய்தார்.
முதலாவதாக, 18ம் நூற்றாண்டில் ஊட்டியின் சேரிங்கிராசின் மேல்பகுதியில், கல்பங்களா கட்டினார். இயற்கை எழில் மிகுந்த அந்த இடத்தில் கட்டடங்களை சுற்றி ஓக் மரங்களை நடவு செய்தார். அதன்பின், சில கட்டடங்கள் கட்டடப்பட்டன. கோடைகாலத்தில் ஆங்கிலேயர்களின் சென்னை மாகாண தலைமை செயலகம், ஊட்டி கல் பங்களாவில் செயல்பட்டது. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தங்குவதற்கு ஊட்டியில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. பின்னர் கலெக்டர் பங்களாவாகவும் செயல்பட்டு வந்தது.
காமராஜரால் உருவான கல்லுாரி
ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின், ஊட்டியில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கட்டடம் கடந்த, 1955-ம் ஆண்டில். அப்போதைய தமிழக முதல்வராக இருந்த காமராஜர் அவர்களால், அரசு கலை கல்லுாரியாக மாற்றப்பட்டது.
அந்த கட்டடத்தில் கல்லுாரி முதல்வர் அலுவலகம், தமிழ், கணிதம் உட்பட, 5 பாடப்பிரிவுகளுக்கான வகுப்பறைகள் நுாலகம் செயல்பட்டது. அந்த கட்டடங்கள் பழமை மாறாமல் பொலிவுடன் காட்சியளிக்கிறது.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பாரம்பரியமிக்க கல் பங்களாவை பாதுகாக்கும் வகையில், அதனை பழமை மாறாமல் புதுப்பிக்க, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு, சட்டப்பேரவையில் நடந்த உயர்கல்வி மானிய கோரிக்கையில், 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டடம் பொலிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணு கோபால் கூறியதாவது:
கடந்த, 18ம் நுாற்றாண்டில் ஊட்டியில் கல் பங்களா கட்டப்பட்டது. காலப்போக்கில் அரசு கலை கல்லுாரியாக மாற்றப்பட்டு, தற்போது, 18 இளங்கலை பாட பிரிவுகளையும், 12 முதுகலை பாட பிரிவுகளையும், 7 ஆய்வு பிரிவுகளையும், 8 உயர் ஆய்வு முனைவர் பட்ட பிரிவுகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. 200 ஆண்டுகள் பழமையான அந்த பங்களாவை புதுப்பிக்க, 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிமெண்ட் பயன்படுத்தாமல், சுண்ணாம்பு கலவையை கொண்டு கட்டியதுபோல், பழமை மாறாமல் பங்களா புதுப்பிக்கப்பட்டது. 16ம் தேதியுடன் ஊட்டி அரசு கலை கல்லுாரிக்கு, 70 வயதாகிறது. நீலகிரி உட்பட தமிழகத்தின் பிற மாவட்ட மாணவர்கள் படிக்கவும் இந்த கல்லுாரி பயன்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.