கூடலுார்; முதுமலை மசினகுடி கோட்டம், சீகூர் வனச்சரகம், சிறியூர் வனப்பகுதியில், பழங்குடி இனத்தை சேர்ந்த நான்கு பேர், தேன் எடுக்க சென்றுள்ளனர். அதில்,கோத்தகிரி இடுக்கொரை பகுதியை சேர்ந்த சின்னசாமி. 55, காட்டெருமை தாக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
வனச்சரகர் சுரேஷ்பாபு அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார், மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்தவரின் உடலை, மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்கு பின் அவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.