Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வசீகரிக்கும் 'கோடேரி வேலி' மழைக்கு பின் பறந்த புற்றீசல்கள்

வசீகரிக்கும் 'கோடேரி வேலி' மழைக்கு பின் பறந்த புற்றீசல்கள்

வசீகரிக்கும் 'கோடேரி வேலி' மழைக்கு பின் பறந்த புற்றீசல்கள்

வசீகரிக்கும் 'கோடேரி வேலி' மழைக்கு பின் பறந்த புற்றீசல்கள்

ADDED : செப் 19, 2025 08:24 PM


Google News
Latest Tamil News
குன்னுார்; குன்னுாரில் மாலை நேர மழைக்கு பின் அதிகளவில் புற்றீசல்கள் பறந்ததால், மக்கள் வியந்தனர்.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலையில் வெயிலும், மாலையில் மழை பெய்து வருகிறது. 'குளுகுளு' கால நிலையும் நிலவுகிறது.

இந்நிலையில், கோடேரி சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் மழைக்கு அதிகளவிலான புற்றீசல்கள் பறந்தது. 'இது இயற்கை வளத்திற்கு உகந்தது,' என, கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவதாஸ் கூறுகையில்,''மண்ணின் வெப்பத்தை சம நிலையில் வைத்து கொள்ளும் வகையில் உள்ள புற்றுகளில் ஈசல்கள் காணப்படும்.

மழை காலத்தில் மண ஈரமாகும் போது, இவை லட்சக்கணக்கில் வெளியேறுகின்றன. ஓரிரு நாட்களில், 90 சதவீதம் இறந்து விடும். உடும்பு மற்றும் பறவைகள் நாய், பூனைகள் உணவாக பயன்படுகின்றன,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us