/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வனத்துறை மீட்ட காட்டெருமை குட்டி இறந்ததுவனத்துறை மீட்ட காட்டெருமை குட்டி இறந்தது
வனத்துறை மீட்ட காட்டெருமை குட்டி இறந்தது
வனத்துறை மீட்ட காட்டெருமை குட்டி இறந்தது
வனத்துறை மீட்ட காட்டெருமை குட்டி இறந்தது
ADDED : ஜன 31, 2024 01:17 AM
குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் அருவங்காடு ரயில் நிலையம் அருகே ஜவனா கவுடர் தெரு குடியிருப்பு பகுதி ஓடையில் தண்ணீர் குடிக்க வந்த காட்டெருமைக் குட்டி, நீரோடை குழியில் சிக்கி, இரவு முழுதும் தவித்தது.
இன்று காலை தகவலறிந்த வனத்துறையினர் காட்டெருமை குட்டியை மீட்டனர். உறைபனியால் எழுந்து நடமாட முடியாமல் தவித்தது.
வனத்துறையினர், நெருப்பு மூட்டி கால்களுக்கு வெப்பமூட்டினர். மருத்துவர் சிகிச்சை அளித்தும் காட்டெருமை குட்டி உயிரிழந்தது.
நீண்ட நேரம் குளிரில் இருந்ததால் இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.