/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாநில ஹாக்கி போட்டிக்கு நடுவர்களாக மாணவர்கள் தேர்வு மாநில ஹாக்கி போட்டிக்கு நடுவர்களாக மாணவர்கள் தேர்வு
மாநில ஹாக்கி போட்டிக்கு நடுவர்களாக மாணவர்கள் தேர்வு
மாநில ஹாக்கி போட்டிக்கு நடுவர்களாக மாணவர்கள் தேர்வு
மாநில ஹாக்கி போட்டிக்கு நடுவர்களாக மாணவர்கள் தேர்வு
ADDED : செப் 18, 2025 08:54 PM
குன்னுார்; குன்னுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் இருவர் மாநில அளவிலான ஹாக்கி போட்டிக்கு நடுவராக தேர்வாகி பெருமை சேர்த்துள்ளனர்.
குன்னுார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் ஹாக்கி விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்லுாரியில் பயிலும் முதலாமாண்டு வணிகவியல் பிரிவு மாணவர் தினேஷ், மாணவி பவித்ரா ஆகியோர் ஹாக்கி போட்டிகளில் பல்வேறு சாதனைகள் புரிந்தனர்.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில், மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் நடுவராக செயல்பட இருவரும் தேர்வு பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு, பள்ளி முதல்வர் சனில், உடற்கல்வி ஆசிரியர் ஞானசுந்தரி, பேராசிரியர்கள் கார்த்திகேயன், பாலசுப்ரமணியம், சரவணன், ராஜேஷ், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.