/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாணவர் தற்கொலை விவகாரம்; ஜிம் உரிமையாளர் தலைமறைவு மாணவர் தற்கொலை விவகாரம்; ஜிம் உரிமையாளர் தலைமறைவு
மாணவர் தற்கொலை விவகாரம்; ஜிம் உரிமையாளர் தலைமறைவு
மாணவர் தற்கொலை விவகாரம்; ஜிம் உரிமையாளர் தலைமறைவு
மாணவர் தற்கொலை விவகாரம்; ஜிம் உரிமையாளர் தலைமறைவு
ADDED : செப் 18, 2025 08:54 PM
குன்னுார்; குன்னுாரில் அ.தி.மு.க., கவுன்சிலர் மகன் உடல் அலர்ஜியால், தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவான ஜிம் பயிற்சியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
குன்னுார் அட்டடி பகுதியை சேர்ந்த, அ.தி.மு.க., கவுன்சிலர் குருமூர்த்தியின் இளைய மகன் ராஜேஷ் கண்ணா, 17. கடந்த மாதம், 31ல் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
குன்னுாரில் முதலுதவி சிகிச்சை அளித்து, கோவை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், 12ல், உயிரிழந்தார். மவுன்ட் ரோட்டில் உள்ள ஜிம் பயிற்சி மையத்தில் வழங்கிய ஜெனடிக் புரோட்டின் காரணத்தால் உடல் அலர்ஜி ஏற்பட்டு மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக, புகார் அளிக்கப்பட்டது. புகாரை பதிவு செய்த குன்னுார் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பயிற்சி மைய உரிமையாளர் சிவக்குமார் தலைமறைவான நிலையில், டி. எஸ்.பி., ரவி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
குருமூர்த்தி கூறுகையில், ''கடந்த, 2023ல் இருந்து மவுன்ட் ரோட்டில் உள்ள ஜிம் சென்றதில், மகனுக்கு ஜெனடிக் புரோட்டின் கொடுத்துள்ளார். அப்போதே அங்கு அனுப்புவதை தடுத்து நிறுத்தினோம். ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடர் காரணத்தால், உடலில் அலர்ஜி ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தார்.
பொதுவாக இது போன்ற பொருட்கள் உரிய அனுமதியுடன் மருந்தகங்களில் வழங்கப்படும். ஆனால், வெளிநாட்டில் இருந்து வரவழைத்த, 400 ரூபாய் மதிப்புள்ள புரோட்டின் பவுடர், 3,900 ரூபாய்க்கு இவர் விற்றுள்ளார். இங்கு வந்து சென்று பாதிப்படைந்தவர்கள் குறித்து போலீசில் முழு விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதுடன், நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.