/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தன்னம்பிக்கையை வளர்க்க விளையாட்டு அவசியம் :ராணுவ பயிற்சி கல்லூரி கர்னல் அறிவுரைதன்னம்பிக்கையை வளர்க்க விளையாட்டு அவசியம் :ராணுவ பயிற்சி கல்லூரி கர்னல் அறிவுரை
தன்னம்பிக்கையை வளர்க்க விளையாட்டு அவசியம் :ராணுவ பயிற்சி கல்லூரி கர்னல் அறிவுரை
தன்னம்பிக்கையை வளர்க்க விளையாட்டு அவசியம் :ராணுவ பயிற்சி கல்லூரி கர்னல் அறிவுரை
தன்னம்பிக்கையை வளர்க்க விளையாட்டு அவசியம் :ராணுவ பயிற்சி கல்லூரி கர்னல் அறிவுரை
ADDED : பிப் 12, 2024 01:17 AM

குன்னூர்;''உடல் ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க விளையாட்டு போட்டி சிறந்ததாக விளங்குகிறது,'' என, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி கர்னல் பேசினார்.
குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு விழா போட்டிகள் நேற்று நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி கர்னல் செந்தில்நாதன், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:
பொதுவாக விளையாட்டு போட்டிகளில் பல்வேறு விளையாட்டில் சாதனை படைப்பது வழக்கம்.
இந்த கல்லுாரியில் நடந்த போட்டியில் விளையாட்டுடன் பாரம்பரிய கலாசார நடனம் சாகசங்களை நிகழ்த்தியது பெருமை அளிப்பதாக உள்ளது. பாரம்பரிய கலாசாரங்களை தொடர்ந்து மாணவிகள் பின்பற்ற வேண்டும்.
விளையாட்டுக்கள் போட்டிகளுக்கு மட்டுமல்ல; உடல் ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க விளையாட்டு போட்டி சிறந்ததாக விளங்குகிறது; கல்வி அறிவை வளர்க்கவும் புத்துணர்வு அளிக்கிறது. விளையாட்டுக்களில் பங்கேற்க ஆர்வம் காட்ட வேண்டும்.
பேராசியர்களுக்கான சேர் போட்டி நடத்தியதில், மாணவிகள் நடனமாடி ஊக்குவித்தனர். இது போன்ற ஈடுபாடும் அனைவருக்கும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பரதநாட்டியம் மற்றும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட சாகச போட்டிகள் நடந்தன.
தடகளம் உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், பேராசிரியைகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா, செயலாளர் ஆனி பாப்ளானி உட்பட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.