Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'பாரதத்தின் மகத்துவத்தால் 162 நாடுகளில் ஸ்ரீ ராமர் தரிசனம்' உபதலை சாய் சச்சிதானந்த குரு நவீன் சாய் பேச்சு

'பாரதத்தின் மகத்துவத்தால் 162 நாடுகளில் ஸ்ரீ ராமர் தரிசனம்' உபதலை சாய் சச்சிதானந்த குரு நவீன் சாய் பேச்சு

'பாரதத்தின் மகத்துவத்தால் 162 நாடுகளில் ஸ்ரீ ராமர் தரிசனம்' உபதலை சாய் சச்சிதானந்த குரு நவீன் சாய் பேச்சு

'பாரதத்தின் மகத்துவத்தால் 162 நாடுகளில் ஸ்ரீ ராமர் தரிசனம்' உபதலை சாய் சச்சிதானந்த குரு நவீன் சாய் பேச்சு

ADDED : ஜன 23, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
குன்னுார்:'அயோத்தி ஸ்ரீ ராமர் பிராண பிரதிஷ்டை, 162 நாடுகளில் ஒளிபரப்பு செய்து உலக மக்கள் தரிசனம் செய்துள்ளது பாரத தேசத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறது,'' என, மேல் உபதலை சாய் நிவாஸ் மைய சச்சிதானந்த குரு நவீன் சாய் பேசினார்.

அயோத்தி ஸ்ரீராம கோவிலில், ராமர் குழந்தை வடிவிலான சிலை நேற்று பிராண பிரதிஷ்டை விழா நடந்தது.

இதனையொட்டி, குன்னுார் மேல் உபதலை கிராமத்தில் உள்ள ஸ்ரீராமர் கோவிலில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, அன்னதான பெருவிழா நடந்தது.

விழாவில்,மேல் உபதலை சாய் நிவாஸ் மைய சச்சிதானந்த குரு நவீன் சாய் முன்னிலை வகித்து பேசியதாவது :

உலகின் கலங்கரை விளக்கமாக பாரத தேசம் விளங்குகிறது. சத்யம் தர்மம், அஹிம்சை என அனைத்துமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர்.

எத்தனை சோதனைகள் வந்தாலும் சத்தியமாக இருந்து வாழ்ந்து காட்டி உலகிற்கு உணர்த்தியவர் ஸ்ரீ ராமர். 500 ஆண்டுகளின் சங்கல்பம், இன்று பூரணமடைந்துள்ளது. அயோத்தி பிராண பிரதிஷ்டை, 162 நாடுகளில் ஒளிபரப்பு செய்து உலக மக்கள் தரிசனம் செய்துள்ளது பாரத தேசத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறது.

ஒவ்வொருவரும் ராம நாமம் சொல்வது நன்மைகளை தரும்; எந்த துன்பமும் வராது. 'காம, க்ரோத, லோப, மத, மாச்சர்ய,' என, அனைத்தையும் ராம நாமம் அகற்றுகிறது. ஈரேழு உலகங்களுக்கும் போற்றும் ராமரின் பாதம் பணிந்து வழிபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

அயோத்யா கர சேவகர் குமரன் அயோத்தி ராமர் கோவில் வரலாறு மற்றும் கரசேவை குறித்து பேசினார்.

தமிழக ஊரக புத்தாக்க திட்ட உதவி இயக்குநர் ரமேஷ் கிருஷ்ணன், நீலகிரி மாவட்ட மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைதி குழு தலைவர் கிருஷ்ணன், நாக்கு பெட்டா பவுண்டேஷன் ராமகிருஷ்ணன் உட்பட பலர், 'அயோத்தியின் சிறப்பு குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தினர்.

கோவிலில் இரு இடங்களில் எல்.சி.டி., வைக்கப்பட்டு அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது ஜெய் ஸ்ரீராம், ராம் ராம் என ஒட்டுமொத்தமாக பக்தர்கள் கூறி வழிபட்டனர்.

ராம பஜனை நாமங்கள் கீர்த்தனைகள் பாடப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை ஊர் தலைவர், கிராம மக்கள், அருவங்காடு சேவா பாரதி நிர்வாகிகள் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us