/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு பயிற்சி உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு பயிற்சி
உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு பயிற்சி
உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு பயிற்சி
உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு பயிற்சி
ADDED : ஜூன் 29, 2025 11:05 PM

ஊட்டி; ஊட்டியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில், வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்து முகாம் நடந்தது.
மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தலைமை வகித்தார். அலுவலர்கள் நந்தகுமார், சிவப்பிரகாசம் ஆகியோர், உணவு பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினர். உணவு பாதுகாப்பு பயிற்சியாளர் யுவராஜ் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில், அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் பலர் பங்கேற்றனர்.