/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரேஷன் அரிசியில் எலி கழிவு; பொருள் வாங்கிய மக்கள் அதிர்ச்சி ரேஷன் அரிசியில் எலி கழிவு; பொருள் வாங்கிய மக்கள் அதிர்ச்சி
ரேஷன் அரிசியில் எலி கழிவு; பொருள் வாங்கிய மக்கள் அதிர்ச்சி
ரேஷன் அரிசியில் எலி கழிவு; பொருள் வாங்கிய மக்கள் அதிர்ச்சி
ரேஷன் அரிசியில் எலி கழிவு; பொருள் வாங்கிய மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜூன் 29, 2025 11:06 PM
கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு அம்பேத்கர் நகர் பகுதி யில், 200க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடை அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் ரேஷன் பொருட்கள் வாங்க, மக்கள் கடைக்கு சென்றனர். மக்கள் வாங்கிய ரேஷன் அரிசியில், எலி கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. தவிர, பாமாயில் பாக்கெட்களும் எலி கடித்த நிலையில், வினியோகிக்கப்பட்டதால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடை விற்பனையாளர், 'எலி கழிவு இருப்பது எனக்கு தெரியாது. இருப்பில் உள்ள ரேசன் பொருட்களை வினியோகம் செய்கிறேன்,'என, பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.
மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் தோட்டப்பணிகளை மேற்கொண்டு வரும் கூலி தொழிலாளர்களாக உள்ளனர். ரேஷன் பொருட்கள் வாங்க வரும் நாட்களில், இருப்பு இல்லை என தட்டி கழிக்காமல், அத்தியாவசிய பொருட்களை தரமாக வழங்க வேண்டும். எலி கழிவுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்,' என்றனர்.