/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிறப்பு மருத்துவ முகாம்: திரளான மக்கள் பங்கேற்பு சிறப்பு மருத்துவ முகாம்: திரளான மக்கள் பங்கேற்பு
சிறப்பு மருத்துவ முகாம்: திரளான மக்கள் பங்கேற்பு
சிறப்பு மருத்துவ முகாம்: திரளான மக்கள் பங்கேற்பு
சிறப்பு மருத்துவ முகாம்: திரளான மக்கள் பங்கேற்பு
ADDED : செப் 14, 2025 10:31 PM
கோத்தகிரி; கோத்தகிரி கேர்கம்பை ஹில்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமை பார்வையிட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது:
இந்த சிறப்பு முகாமில், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள், விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல், ரத்தப்பரிசோதனை, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து பரிசோதனை முடிவுகளை உள்ளடக்கிய மருத்துவ கோப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது.
முகாமில், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்பேறு, இ.என்.டி., மனநலம், இயன்முறை மருத்துவம், ரேடியாலஜி, நுரையீரல் நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் சிகிச்சை, ஆயுர்வேதம் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து, சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
முகாம், காலை, 9:00 மணி முதல் 4:00 மணி வரை நடைபெறும். பல்வேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். மக்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார். இதில், திரளான மக்கள் பங்கேற்றனர்.
குன்னுார் சப்-கலெக் டர் சங்கீதா, ஊட்டி அரசு கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ஸ்ரீ சரவணன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன் மற்றும் கோத்தகிரி மருத்துவ அலுவலர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.