/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசு அதிகாரிகள் போலீசில் புகார்; பந்தலுாரில் இரு ஒப்பந்ததாரர்கள் கைது அரசு அதிகாரிகள் போலீசில் புகார்; பந்தலுாரில் இரு ஒப்பந்ததாரர்கள் கைது
அரசு அதிகாரிகள் போலீசில் புகார்; பந்தலுாரில் இரு ஒப்பந்ததாரர்கள் கைது
அரசு அதிகாரிகள் போலீசில் புகார்; பந்தலுாரில் இரு ஒப்பந்ததாரர்கள் கைது
அரசு அதிகாரிகள் போலீசில் புகார்; பந்தலுாரில் இரு ஒப்பந்ததாரர்கள் கைது
ADDED : செப் 15, 2025 12:38 AM

பந்தலுார்; பந்தலுாரில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த, இரு ஒப்பந்ததாரர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராயின். இவர், மாவட்டத்தில் பிரபலமான ஒப்பந்ததாரராக உள்ளார். இவருக்கு சொந்தமான தார் கலவை மையம் தேவாலா பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த தார் கலவை மையத்தில் எழும் புகையால் பல்வேறு பாதிப்புகள், ஆலையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்து, சில குடியிருப்புகள் சேதமானது, குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் கடந்த ஆக., மாதம் தொடர் போராட்டகள் நடத்தப்பட்டது.
இதனால், கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் தலைமையில், ஆக.,8ம் தேதி தார்கலவை மையம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. ஆலை உரிமையாளர் ராயின், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த, 6ம் தேதி நடந்த விசாரணை முடிவில், 'ஆர்.டி.ஓ., குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு நடத்தி, இரண்டு வாரத்தில் ஒரு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அப்பகுதியில் இடிந்து விழுந்த சுவற்றின் இடிபாடுகளை இரண்டு நாட்களில் அகற்றும் வகையில் ஆலையை திறந்து, பணிகள் முடிந்த பின்னர், ஆலையை மூடி 'சீல்' வைக்க வேண்டும்,' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்த, 13ம் தேதி ஆர்.டி.ஓ., குணசேகரன், நெல்லியாளம் நகராட்சி கமிஷனர் சக்திவேல், ஆகியோர் தலைமையில் போலீசார் முன்னிலையில் 'சீல்' அகற்றப்பட்டது.
ராயினுக்கு சொந்தமான வாகனங்களை வெளியே எடுத்த பின்னர், ஆலையில் உள்ள பொருட்கள், செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில், நகராட்சி சார்பில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இதனால், கமிஷனர் சக்திவேல் தேவாலா போலீஸ் ஸ்டேஷனில், 'அரசு அதிகாரிகளை வேலை செய்யாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தனர்,' என, நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இதன்பேரில், கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் விசாரணை நடத்தி, ராயின்,69, மற்றொரு ஒப்பந்ததாரர் சக்கீர்,49, ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால், தேவாலா பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.