Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இத்தலார் பகுதியில் ஐந்து இடங்களில்... 'சாயில் நெய்லிங்' பணி!மழையின் போது நிலச்சரிவு பாதிப்பு குறையும்

இத்தலார் பகுதியில் ஐந்து இடங்களில்... 'சாயில் நெய்லிங்' பணி!மழையின் போது நிலச்சரிவு பாதிப்பு குறையும்

இத்தலார் பகுதியில் ஐந்து இடங்களில்... 'சாயில் நெய்லிங்' பணி!மழையின் போது நிலச்சரிவு பாதிப்பு குறையும்

இத்தலார் பகுதியில் ஐந்து இடங்களில்... 'சாயில் நெய்லிங்' பணி!மழையின் போது நிலச்சரிவு பாதிப்பு குறையும்

ADDED : ஜூன் 23, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
ஊட்டி:மலை மாவட்டத்தில், நிலச்சரிவு அபாய பகுதிகளில், 'சாயில் நெய்லிங்' எனப்படும் மண் ஆணி பொருத்தி 'ைஹட்ரோ சீடிங்' முறையில் பசுமையை பேணி பாதுகாக்கும் தொழில் நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, பந்தலுார், கூடலுார் பகுதிகளில், 280 இடங்கள் பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் 'சாயில் நெய்லிங்' பொருத்தி 'ைஹட்ரோ சீடிங்' முறையில் பசுமையை பேணி பாதுகாக்கும் தொழில் நுட்பம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டியில் துவங்கிய திட்டம்


கடந்தாண்டு பரிசோதனை முயற்சியாக, ஊட்டி - கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து மற்றும் பாக்கியநகர் ஆகிய இரு இடங்களில் இப்பணியானது செயல்படுத்தப்பட்டது. பசுமையை பேணி காக்கும் இந்த தொழில் நுட்பம் திருப்திகரமாக இருந்ததால், இப்பணியை மாவட்டத்தின் பிற நிலச்சரிவு உள்ள பகுதிகளில் செயல்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் தலைமைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

ஐந்து இடங்களில் பணி


அதன்படி, இத்திட்டம், 'கோத்தகிரி- குன்னுார் சாலை கட்டபெட்டு நடுஹட்டி பவர்ஹவுஸ்; குன்னுார் - கேத்தி பாலாடா சேலாஸ் சாலையில் உல்லாடா; ஊட்டி - கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் கோடப்பமந்து, மடித்தொரை சாலை; ஊட்டி - அவலாஞ்சி சாலையில் இத்தலார்,' என, ஐந்து இங்களில் செயல்படுத்தப்பட்டு, பணியானது நடந்து வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றால், வரும் ஆண்டுகளில் மழை காலத்தில் இப்பகுதிகளில் மண் அரிப்பு தடுக்கப்பட்டு, நிலச்சரிவு அபாயங்கள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. பேரிடர்களை தவிர்க்க முடியும்.

பிற பகுதியிலும் செயல்படுத்த திட்டம்


நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில்,''நீலகிரியில் பருவமழையின் போது நிலச்சரிவு அபாயத்தில் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக நடந்த பேரிடர் பாதிப்புகளில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில், மலை மாவட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் குறிப்பிட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 'சாயில் நெய்லிங்' பொருத்தி 'ைஹட்ரோ சீடிங்' முறையில் பசுமையை பேணி பாதுகாக்கும் தொழில் நுட்பம் பணி நெடுஞ்சாலைத்துறையால் செயல்படுத்தப்பட்டது.

அப்பணிகள் திருப்திகரமாக இருப்பதால், மாவட்டத்தில் தற்போது, 5 இடங்களில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக மாவட்டத்தின் பிற இடங்களிலும் இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us