/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சில்ஹல்லா; அப்பர்பவானி நீரேற்று மின் திட்டங்கள் வரமா...சாபமா...? 12 ஆண்டுகளாக இழுபறி தொடர்வதால் கருத்து கேட்க முடிவுசில்ஹல்லா; அப்பர்பவானி நீரேற்று மின் திட்டங்கள் வரமா...சாபமா...? 12 ஆண்டுகளாக இழுபறி தொடர்வதால் கருத்து கேட்க முடிவு
சில்ஹல்லா; அப்பர்பவானி நீரேற்று மின் திட்டங்கள் வரமா...சாபமா...? 12 ஆண்டுகளாக இழுபறி தொடர்வதால் கருத்து கேட்க முடிவு
சில்ஹல்லா; அப்பர்பவானி நீரேற்று மின் திட்டங்கள் வரமா...சாபமா...? 12 ஆண்டுகளாக இழுபறி தொடர்வதால் கருத்து கேட்க முடிவு
சில்ஹல்லா; அப்பர்பவானி நீரேற்று மின் திட்டங்கள் வரமா...சாபமா...? 12 ஆண்டுகளாக இழுபறி தொடர்வதால் கருத்து கேட்க முடிவு
ADDED : மார் 11, 2025 10:59 PM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சில்ஹல்லா, அப்பர்பாவனி மின் திட்டங்களை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், 30 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், வரும், 20ம் தேதி குந்தாவில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையங்கள்; 13 அணைகள்; 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. அணைகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் மூலம் நாள்தோறும், 833.65 மெகாவாட் மின் உற்பத்திமேற்கொள்ள முடியும்.
இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தில், 70 மெகாவாட் மின்சாரம் நீலகிரிக்கு தேவைப்படுகிறது. 80 சதவீத மின்சாரம் கோவை, ஈரோடு உட்பட வெளி மாவட்டங்களுக்கு கொண்டு வினியோகிக்கப்படுகிறது.
சில்ஹல்லா மின் திட்டம் அறிவிப்பு
இந்நிலையில், கடந்த, 2013ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில், 110 விதியின் கீழ், 7000 கோடி ரூபாய் மதிப்பில், 2000 மெகாவாட் மின் திட்டமான, 'சில்ஹல்லா' மின் திட்டத்தை அறிவித்தார்.
இத்திட்டத்திற்காக, எடக்காடு அருகே பிக்குலி, மஞ்சூர் அருகே அன்னமலை கோவில் அடிவாரத்தில் அணை கட்டவும்; மஞ்சூர், கோவை சாலையில் பெரும் பள்ளத்தில் மின் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக, 980 ஏக்கர்நிலம் கையப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்வாரியம் பல கட்ட ஆய்வுகள் மேற்கொண்டது. திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதால், 7000 கோடி ரூபாய் நிதி, 10,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
அச்சத்தில், 30 கிராம மக்கள்
இந்நிலையில், 'மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதி; விவசாயிகள், கிராம பொதுமக்கள் எதிர்ப்பு,' என, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இங்குள்ள, 'தேனாடு, மைனலை, கோத்திபென், மாசிக் கண்டி, பெங்கால்,கன்னேரி, மந்தனை, தங்காடு, ஓர நள்ளி, பெம்பட்டி, பேலிதளா, மணிஹட்டி, மீக்கேரி, அப்புக்கோடு, துளிதலை, கல்லக்கொரை, பாலகொலா, முதுகுலா, நுந்தளா, பாலாடா, ஒசஹட்டி, புதுஹட்டி, ஸ்ரீராம் நகர், மணலாடா,' உட்பட, 30 கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
சில்ஹல்லா நீர் பிடிப்பு பகுதி பாதுகாப்பு குழு மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் சிவலிங்கம் கூறியதாவது:
தொடர் போராட்டம் நடத்த முடிவு
இந்த திட்டத்தால், 1000 ஏக்கர் பரப்பில் தேயிலை, மலை காய்கறி தோட்டங்கள் பாதிக்கப்படும். விவசாயிகள்; விவசாய தொழில் சார்ந்தோர் என, 5000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர். மேலும், பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி ராட்சதக் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.
இதனால், ஏற்படக்கூடிய அதிர்வுகளால் இயற்கை பேரிடர் அபாயம் ஏற்படும். இப்பகுதிகள் நிலச்சரிவு அபாய பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியாகும். இதனால், பொதுமக்கள்;விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.