/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த அம்மன் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்
ADDED : மார் 11, 2025 10:55 PM

கூடலுார்; மசினகுடி, அருள்மிகு பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது; சிம்ம வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
நீலகிரியில் மிகவும் பிரசித்தி பெற்ற, மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா முன்னிட்டு, 8ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதல், அபிஷேகம் நிகழ்ச்சிகள் நடந்தது. 9ம் தேதி இரவு, 8:00 மணிக்கு கங்கை பூஜை நடந்தது. பக்தர்கள் கரகம், முளைப்பாரி எடுத்து பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான, தேர்திருவிழா நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு துவங்கியது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில், நீலகிரி எஸ்.பி., நிஷா, இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் வீரக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று, காலை மாவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெற்றது.
நான்கு நாட்கள் நடந்த விழாவை முன்னிட்டு, கூடலுார், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காட்டு யானைகள் கோவில் வளாகத்துக்குள் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.