/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நடைபாதை கடைகள்; பொது மக்கள் பாதிப்பு நடைபாதை கடைகள்; பொது மக்கள் பாதிப்பு
நடைபாதை கடைகள்; பொது மக்கள் பாதிப்பு
நடைபாதை கடைகள்; பொது மக்கள் பாதிப்பு
நடைபாதை கடைகள்; பொது மக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 02, 2025 11:58 PM

கோத்தகிரி; கோத்தகிரி மார்க்கெட் பகுதியில், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி சமீபத்தில், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சிக்கான எந்த கட்டமைப்பு வசதிகளும் இங்கு இல்லை. குறிப்பாக, 'பார்க்கிங்' ஏதும் இல்லை. கோத்தகிரி போலீசார் அவ்வப்போது, போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினாலும், நெரிசல் ஏற்படுவது, தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
கோத்தகிரி நகர பகுதியில், 2,000 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் உள்ளன. மாணவர்கள் மற்றும் மக்கள் சென்றவர ஏதுவாக, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நடைபாதைகளில பலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால், மக்கள் நடந்து செல்வதில், சிக்கல் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, மக்கள் இடையூறு இல்லாமல் நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.