/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மார்ச் முதல் மே மாதம் வரை சராசரி அளவை விட மழை பொழிவு அதிகரிப்பு! கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவுமார்ச் முதல் மே மாதம் வரை சராசரி அளவை விட மழை பொழிவு அதிகரிப்பு! கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
மார்ச் முதல் மே மாதம் வரை சராசரி அளவை விட மழை பொழிவு அதிகரிப்பு! கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
மார்ச் முதல் மே மாதம் வரை சராசரி அளவை விட மழை பொழிவு அதிகரிப்பு! கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
மார்ச் முதல் மே மாதம் வரை சராசரி அளவை விட மழை பொழிவு அதிகரிப்பு! கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

ஆண்டு சராசரி மழையளவு
மாவட்டத்தில்ஆண்டு சராசரி மழை அளவு, 130 செ.மீ., ஆகும். நடப்பாண்டில், ஜன ., முதல் மே மாதம் இறுதி வரை, 28 செ.மீ., மழை பெய்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இது சராசரி மழை அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழையை நம்பி, மாவட்டத்தின் கூட்டு குடிநீர், பில்லுார் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால், ஈரோடு மாவட்டங்களில், 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
சாகுபடிக்கான நீர் தேவை
நீலகிரியை பொறுத்தவரை, 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை மற்றும் 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு அந்தந்த காலங்களில் பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே விவசாயம் பாதிப்பில்லாமல் மேற்கொள்ள முடியும். தற்போது, மே மாதம் பெய்த மழை மாவட்டத்தின் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை வழங்கி உள்ளது.
காலநிலை மாற்றத்தால் வருகை குறைவு
ஊட்டி கோடை சீசன் ஏப்., மே மாதங்களில் நிலவுகிறது. நடப்பாண்டின் கோடை சீசன் சமயங்களில் கூடுதல் மழை பொழிவு ஏற்பட்டதாலும், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதாலும், சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.