/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கால்வாயில் தேங்கும் கழிவுகள்; குடிநீர் மாசுபடும் அபாயம்கால்வாயில் தேங்கும் கழிவுகள்; குடிநீர் மாசுபடும் அபாயம்
கால்வாயில் தேங்கும் கழிவுகள்; குடிநீர் மாசுபடும் அபாயம்
கால்வாயில் தேங்கும் கழிவுகள்; குடிநீர் மாசுபடும் அபாயம்
கால்வாயில் தேங்கும் கழிவுகள்; குடிநீர் மாசுபடும் அபாயம்
ADDED : ஜன 04, 2024 10:56 PM

பந்தலுார்:பந்தலுாரில் கால்வாயில் தேங்கும் கழிவு நீரால் குடிநீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் பஜார் கடைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும், கழிவு நீர் மற்றும் மழை காலத்தில் பெருகும் மழை நீர், வழிந்தோட நெல்லியாளம் நகராட்சி மூலம், கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
கால்வாயில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கழிவுகளை வீசி எறிவதால், கழிவுகள் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
'பிளாஸ்டிக்' பைகளில் கட்டப்படும் கழிவுகள், பல்வேறு இடங்களிலும் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி இடமாகவும், பல்வேறு நோய் தொற்றுகளை பரப்பும் இடமாகவும் மாறி வருகிறது. இந்த கால்வாய்களில் குடிநீர் குழாய்களும் செல்லும் நிலையில், குடிநீரும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே, இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.