ADDED : ஜன 19, 2024 12:27 AM
பெ.நா.பாளையம் : வீரபாண்டி பிரிவில் உள்ள புனித ஜான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
அமிர்தம் அறக்கட்டளையின் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். தாளாளர் அரவிந்தன் முன்னிலை வகித்தார். ஆசிரியை நந்தினி வரவேற்றார். முதல்வர் பாஸ்கரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொங்கல் வழிபாடு நடந்தது. விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
தமிழாசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.


