/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் பேன்சி கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் ஊட்டியில் பேன்சி கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
ஊட்டியில் பேன்சி கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
ஊட்டியில் பேன்சி கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
ஊட்டியில் பேன்சி கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
ADDED : செப் 10, 2025 09:26 PM
ஊட்டி; ஊட்டி மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் விற்பனை செய்த பேன்சி கடைக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதி மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து அவ்வப்போது உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி, ஊட்டி நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சிபி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஊட்டி மார்க்கெட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், ஒரு பேன்சி கடையில் தடை செய்யப்பட்ட, 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டறிந்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.