/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பொலிவுபெறும் மலை ரயில் நிலையம்: கோட்ட பொது மேலாளர் ஆய்வு பொலிவுபெறும் மலை ரயில் நிலையம்: கோட்ட பொது மேலாளர் ஆய்வு
பொலிவுபெறும் மலை ரயில் நிலையம்: கோட்ட பொது மேலாளர் ஆய்வு
பொலிவுபெறும் மலை ரயில் நிலையம்: கோட்ட பொது மேலாளர் ஆய்வு
பொலிவுபெறும் மலை ரயில் நிலையம்: கோட்ட பொது மேலாளர் ஆய்வு
ADDED : மே 26, 2025 10:31 PM

குன்னுார்; நுாற்றாண்டு பழமை வாய்ந்த குன்னுார் மலை ரயில் நிலையம், 6.7 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக பொறுப்பேற்ற, சேலம் கோட்ட ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
குன்னுார் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம், காணொளி மூலம் பிரதமர் மோடி திறந்து வைப்பதாக இருந்த நிலையில், பணிகள் நிறைவு பெறாததால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற சேலம் கோட்ட ரயில்வே பொது மேலாளர் பன்னாலால், மேட்டுப்பாளையத்தில் இருந்து தனி சிறப்பு ரயிலில் குன்னுாருக்கு வருகை தந்தார். அதிகாரிகள், ஊழியர்கள் வரவேற்பளித்தனர். ரயில்வே தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு வழங்கினர்.
ரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர், ரயில் நிலையத்தில் பூங்கா வசதியை ஏற்படுத்த உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''நாட்டில் பல ரயில் நிலையங்களும் சீரமைக்கப்பட்டு, பாரத பிரதமர் மோடி திறந்து வைத்து வருகிறார். இங்கும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளதால், விரைவில் திறக்கப்படும். சுற்றுலா பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப தினமும் மலை ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.