/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
ADDED : மே 26, 2025 10:31 PM
ஊட்டி; 'மழையின் போது ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் தேவை,' என, மின்வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை துவங்கி உள்ளது. பொதுமக்கள் மின் விபத்துக்களை தவிர்க்க உயிர் காக்கும் கருவியை ஒவ்வொரு வீட்டிலும் பொருத்த வேண்டும். இழுவை கம்பிகள் (ஸ்டே ஒயர்) அருகே செல்ல வேண்டாம்.
வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனே வீட்டில் உள்ள மெயின் சுவீட்சினை உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து கொண்டு அணைத்து விட்டு உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். இடி, மின்னலின் போது தஞ்சம் அடைய மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கால்நடைகளை மின் கம்பம் அல்லது இழுவை கம்பிகளில் கட்டக் கூடாது. உலோக பொருட்களை மின் கம்பிகளுக்கு அருகில் எடுத்துச்செல்ல வேண்டாம். மின் இடையூறுகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள உரிய பிரிவு பொறியாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். 94987-94987 என்ற மொபைல் எண்ணில் புகாரை பதிவு செய்யலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.