/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அரசூர் பிரிவில் சர்வீஸ் ரோடு சீரமைப்பு ; தினமலர் செய்தி எதிரொலிஅரசூர் பிரிவில் சர்வீஸ் ரோடு சீரமைப்பு ; தினமலர் செய்தி எதிரொலி
அரசூர் பிரிவில் சர்வீஸ் ரோடு சீரமைப்பு ; தினமலர் செய்தி எதிரொலி
அரசூர் பிரிவில் சர்வீஸ் ரோடு சீரமைப்பு ; தினமலர் செய்தி எதிரொலி
அரசூர் பிரிவில் சர்வீஸ் ரோடு சீரமைப்பு ; தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஜன 03, 2024 11:45 PM

சூலுார் : அரசூர் பிரிவில் சேதமடைந்த சர்வீஸ் ரோடு, சீரமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கப்பள்ளி முதல் நீலம்பூர் வரை தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி ரோடு உள்ளது. ஆறுவழி சாலையான இந்த ரோட்டில், இரு புறங்களிலும் சர்வீஸ் ரோடுகள் உள்ளன. அரசூர் பிரிவில் வடக்கு புறம் பழைய கிணற்றை மூடி, சர்வீஸ் ரோடு போடப்பட்டிருந்தது.
தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்வதால், அந்த இடம் சேதமடைய துவங்கியது.
அந்த இடத்தில் மண் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டதால், அடிக்கடி விபத்துகள் நடந்தன. அப்பகுதி மக்கள் ரோட்டை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இடத்தில் எச்சரிக்கை செய்யும் விதமாக தடுப்புகளை வைத்தனர். இதுகுறித்த செய்தி, தினமலர் நாளிதழில், கடந்த, டிச., 23ம் தேதி படத்துடன் வெளியானது.
செய்தியின் எதிரொலியாக, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளமான பகுதியில் தார் கலவை போட்டு, சமன்படுத்தினர். இதனால், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல், பிரதான ரோட்டின் நடுவே பல இடங்களில் குழிகள் ஏற்பட்டு உள்ளன. அதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். அந்த இடங்களை கண்டறிந்து பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.