/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குன்னூரில் தொடரும் மழை: பூங்காவில் படகு சவாரி ரத்துகுன்னூரில் தொடரும் மழை: பூங்காவில் படகு சவாரி ரத்து
குன்னூரில் தொடரும் மழை: பூங்காவில் படகு சவாரி ரத்து
குன்னூரில் தொடரும் மழை: பூங்காவில் படகு சவாரி ரத்து
குன்னூரில் தொடரும் மழை: பூங்காவில் படகு சவாரி ரத்து
ADDED : ஜன 07, 2024 01:13 AM
குன்னுார்:குன்னுாரில் தொடரும் மழை காரணமாக, சிம்ஸ்பூங்கா ஏரியில் நேற்று காலை படகு சவாரி நிறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனிமூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால், குன்னுார் சிம்ஸ் பூங்கா மற்றும் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக, குன்னுார் சிம்ஸ் பூங்காவில் கடந்த ஆண்டு ஜன., துவக்க வாரத்தில் நாள்தோறும், 1,000க்கும் மேற்பட்டோர் வருகை தந்த நிலையில், தற்போது, 400 பேருக்கும் குறைவானவர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை தொடர்ந்த சாரல் மழையால், பூங்கா படகு இல்ல ஏரியில் படகு சவாரி நிறுத்தப்ட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தோட்டக்கலை துறையினர் கூறுகையில், ' குன்னுாரில் மழை பெய்யும் போது மட்டும் படகு சவாரி நிறுத்தப்படும். காலநிலை மாறியதும் மீண்டும் இயக்கப்படும். நடப்பாண்டு பனி விழும் மாதத்தில், மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது' என்றனர்.