/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அய்யன்கொல்லியில் அதிகரிக்கும் 'பிளாஸ்டிக்' பாட்டில்: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் விதிமீறல்அய்யன்கொல்லியில் அதிகரிக்கும் 'பிளாஸ்டிக்' பாட்டில்: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் விதிமீறல்
அய்யன்கொல்லியில் அதிகரிக்கும் 'பிளாஸ்டிக்' பாட்டில்: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் விதிமீறல்
அய்யன்கொல்லியில் அதிகரிக்கும் 'பிளாஸ்டிக்' பாட்டில்: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் விதிமீறல்
அய்யன்கொல்லியில் அதிகரிக்கும் 'பிளாஸ்டிக்' பாட்டில்: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் விதிமீறல்
ADDED : ஜன 03, 2024 11:32 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பாட்டில் புழக்கம் அதிகரித்து வருகிறது.
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், போதை பொருட்கள், மாநில எல்லையான பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வந்த போதும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகளை வசை பாடும் சில வியாபாரிகள், மீண்டும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிஙல், அய்யன்கொல்லி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பஜாரை ஒட்டிய மறைவான பகுதியில் மது பிரியர்கள் வாங்கி வரும் தண்ணீர் பாட்டில்கள், காலி செய்யப்பட்ட பின்னர் அதே பகுதியில் வீசப்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதியில் அனைத்து கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' விற்பனையை முழுமையாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.