Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டியில் நிரந்தர ஆர்.டி.ஓ., நியமிக்காததால் பணியில் சுணக்கம்! பைல்கள் தேக்கம்; வாகன உரிமையாளர்கள் அவதி

ஊட்டியில் நிரந்தர ஆர்.டி.ஓ., நியமிக்காததால் பணியில் சுணக்கம்! பைல்கள் தேக்கம்; வாகன உரிமையாளர்கள் அவதி

ஊட்டியில் நிரந்தர ஆர்.டி.ஓ., நியமிக்காததால் பணியில் சுணக்கம்! பைல்கள் தேக்கம்; வாகன உரிமையாளர்கள் அவதி

ஊட்டியில் நிரந்தர ஆர்.டி.ஓ., நியமிக்காததால் பணியில் சுணக்கம்! பைல்கள் தேக்கம்; வாகன உரிமையாளர்கள் அவதி

ADDED : ஜூன் 12, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
ஊட்டி; ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நிரந்தர ஆர்.டி.ஓ., நியமிக்கப்படாததால் முக்கிய கோப்புகள் தேங்கியுள்ள நிலையில், பல்வேறு தேவைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள்; உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், புதிய வாகனம் பதிவு செய்தல், ஓட்டுனர் உரிமம், உரிமையாளர் பெயர் மாற்றம், தரச்சான்று உட்பட வாகனங்கள் தொடர்பான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

நீலகிரியை பொறுத்த வரை ஊட்டி- குன்னுார் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் தாலுகா பகுதிகளை உள்ளடக்கிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ், 'இரு சக்கரம், கார் , பஸ், வேன்,' என, 34,000 வாகனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஓட்டுனர்கள் தவிப்பு


ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு குறிப்பாக, உரிமையாளர் பெயர் மாற்றம், தரச்சான்று உட்பட வாகனங்கள் தொடர்பான அனைத்து பணிகளுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு மூன்று மாதங்களாக ஆர்.டி.ஓ., பணியிடம் காலியாக உள்ளதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

குறிப்பாக, கூடலுார், பந்தலுார், மஞ்சூர் உள்ளிட்ட தொலை துார பகுதிகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், 'பொறுப்பு அதிகாரி பணியில் இருப்பார்' என்ற நம்பிக்கையில் இங்கு வருகின்றனர்.

இந்நிலையில், பெரும்பாலான நாட்கள் சமவெளி பணியில் இருப்பதால், இங்கு வருவதில் சிக்கல் உள்ளது. பல்வேறு பணிக்காக ஊட்டிக்கு வரும் வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒரே நாளில் மொத்த பைல்களை கையாள வருவதால் குறிப்பாக 'டீ போர்டு' வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே வந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நிரந்தர ஆர்.டி.ஓ., தேவை


வாகன உரிமையாளர்கள் கூறுகையில்,'மலை மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில், இங்கு கடந்த மூன்று மாதங்களாக நிரந்தர ஆர்.டி.ஓ., இல்லை.

பொறுப்பு ஆர்.டி.ஓ.,வும் சரியாக வருவதில்லை. எனவே, மலை மாவட்டத்தில் நிலையை கருத்தில் கொண்டு நிரந்தர ஆர்.டி.ஓ.,வை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

ஊட்டி கோட்டாட்சியர் சதீஷ்குமார் கூறுகையில்,''நீலகிரியில், ஆர்.டி.ஓ., பணியிடம் காலியாக உள்ளதால், பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us