/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மதுக்கடையை மாற்ற இடம் தேடும் அதிகாரிகள்; ஜமாபந்தியில் மூன்றாம் முறையாக மனு மதுக்கடையை மாற்ற இடம் தேடும் அதிகாரிகள்; ஜமாபந்தியில் மூன்றாம் முறையாக மனு
மதுக்கடையை மாற்ற இடம் தேடும் அதிகாரிகள்; ஜமாபந்தியில் மூன்றாம் முறையாக மனு
மதுக்கடையை மாற்ற இடம் தேடும் அதிகாரிகள்; ஜமாபந்தியில் மூன்றாம் முறையாக மனு
மதுக்கடையை மாற்ற இடம் தேடும் அதிகாரிகள்; ஜமாபந்தியில் மூன்றாம் முறையாக மனு
ADDED : ஜூன் 12, 2025 11:36 PM
குன்னுார்; குன்னுாரில் டாஸ்மாக் மது கடையை அகற்ற ஜமாபந்தியில் மனுக்கள் வழங்கிய போது, இரண்டு ஆண்டுகளாக மாற்று இடம் தேடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குன்னுார், 3 நாட்கள் ஜமாபந்தி நடந்தது. நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.
அதில், குன்னுார் லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு சார்பில் கொடுத்த மனுவில், 'குன்னுார் மவுண்ட் ரோடு டாஸ்மாக் கடையை அகற்ற மூன்றாவது ஆண்டாக ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''பள்ளிகள், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் உள்ள குன்னுார் மவுண்ட் ரோட்டில் வைத்த டாஸ்மாக் கடையால், அனைவருக்கும் இடையூறு ஏற்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கடந்த, 2 ஆண்டுகளாக ஜமாபந்தியில் மனு அளித்த போதும், மாற்று இடம் தேடி வருவதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். நடப்பாண்டிலாவது, கடையை அகற்ற வேண்டும் என மனு கொடுத்துள்ளோம்,'' என்றார்.
கண்டு கொள்ளாத நகராட்சி
இதே போல, 29வது வார்டு காந்திபுரம் இந்திரா நகர் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தராததால், 'காது கேட்காத, பேசாத, கண்டு கொள்ளாத' மூன்று குரங்குகள் பொம்மை படத்துடன் துண்டு பிரசுரம் அச்சடித்து, கையில் ஏந்தி வந்த மக்கள், மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கினர். அப்பகுதியில், 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடுப்புச்சுவர் அமைத்து கொடுத்ததாக நகராட்சி கமிஷனர் இளம்பரிதி தெரிவித்தார். அப்போது, 'இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தருவதில்லை,' என, பொதுமக்கள்தெரிவித்து சென்றனர்.