/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேயிலை உற்பத்திக்கு உகந்ததல்ல... பச்சை விறகு! அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுக்கணும்தேயிலை உற்பத்திக்கு உகந்ததல்ல... பச்சை விறகு! அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுக்கணும்
தேயிலை உற்பத்திக்கு உகந்ததல்ல... பச்சை விறகு! அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுக்கணும்
தேயிலை உற்பத்திக்கு உகந்ததல்ல... பச்சை விறகு! அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுக்கணும்
தேயிலை உற்பத்திக்கு உகந்ததல்ல... பச்சை விறகு! அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுக்கணும்
ADDED : ஜன 07, 2024 11:24 PM

ஊட்டி;கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பச்சை விறகுகள் பயன்படுத்துவதால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்படுவதால், அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுக்க வேண்டும். என. உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரியில், குன்னுார் இன்கோ சர்வ் கட்டுப்பாட்டின் கீழ், மஞ்சூர், கிண்ணக் கொரை, பிக்கட்டி, எடக்காடு, மேற்குநாடு, இத்தலார், கைக்காட்டி, கரும்பாலம், எப்பநாடு, கட்டபெட்டு, சாலிஸ்பரி, பிராண்டியா உள்ளிட்ட, 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்படுகிறது. 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து கொண்டு தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் இலைகளை அந்தந்த கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.
எரிபொருளாக கருவேல மரம்
கூட்டுறவு தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தியில் அரைக்கு பச்சை தேயிலைக்கு அதற்கான வெப்பத்தை கொடுக்க, கருவேல மரக்கட்டைகள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவேல மரங்களை மதுரை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தொழிற்சாலைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
சில கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் கற்பூரம், சீகை உள்ளிட்ட மரங்களை உள்ளூர் மர வியாபாரிகள் தொழிற்சாலைக்கு வினியோகிக்கின்றனர்.
வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்படும் கருவேல மரங்களுடன் கற்பூரம், சீகை மரங்களை கலந்து உற்பத்திக்கு பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இப்படி பயன்படுத்துவதால் தேயிலை உற்பத்தியில் ' சுணக்கம்' ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலை உறுப்பினர் ராமன் கூறுகையில், '' தேயிலை உற்பத்திக்கு கருவேல மரக்கட்டைகள் எரிபொருளாக பயன்படுத்துவது தான் வழக்கம். உள்ளூர் மர வியாபாரிகள் மூலம் தொழிற்சாலை நிர்வாகங்கள் கற்பூரம், சீகை மரங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதனால், தேயிலை உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், இவ்வகை மரங்களால் உற்பத்தி செலவினங்களும் அதிகரிக்கிறது. அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுக்க வேண்டும்.'' என்றார்.