/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வனத்துறைக்கு நவீன வாகனம்; கரடு முரடான பாதையில் பயணிக்கலாம் வனத்துறைக்கு நவீன வாகனம்; கரடு முரடான பாதையில் பயணிக்கலாம்
வனத்துறைக்கு நவீன வாகனம்; கரடு முரடான பாதையில் பயணிக்கலாம்
வனத்துறைக்கு நவீன வாகனம்; கரடு முரடான பாதையில் பயணிக்கலாம்
வனத்துறைக்கு நவீன வாகனம்; கரடு முரடான பாதையில் பயணிக்கலாம்
UPDATED : மே 28, 2025 11:58 PM
ADDED : மே 28, 2025 11:24 PM

கூடலுார்,; முதுமலையில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து நிலப்பரப்பிலும் இயங்கும், 'ஆல்-டெரைன்' வாகனம் வழங்கப்பட்டதால் பெரும் பயன் ஏற்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விழாவில், வனத்துறை சார்பில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன.
அதில், நீலகிரி மலை பகுதி, கோவை வனக்கோட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அனைத்து நிலப்பரப்புகளிலும் இயக்கக்கூடிய, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு ஆல்-டெரைன் வாகனத்தை வனத்துறைக்கு வழங்கப்பட்டது.
வனத்துறையினர் கூறுகையில், ' நீலகிரி, கோவை, சத்தியமங்கலம் வனப்பகுதியில் பயன்படுத்த அரசு வழங்கியுள்ள ஆல்-டெரைன் வாகனம் சாலைகள் மற்றும் இன்றி கரடு முரடான நிலப்பரப்புகள், சேறு, மணல், புல்வெளிகள் உள்ளிட்ட நிலப் பகுதிகளிலும் இயக்கக் கூடிய வகையில் வடிவமைத்துள்ளனர்.
நான்கு சக்கரம் இருந்தாலும், இதன் வடிவமைப்பு மோட்டார் சைக்கிள் போல் இயக்க கூடியது. பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். இதனை இயக்குபவர், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும்,' என்றனர்.