/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்த சிறுத்தை; அடித்து கொல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை?தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்த சிறுத்தை; அடித்து கொல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை?
தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்த சிறுத்தை; அடித்து கொல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை?
தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்த சிறுத்தை; அடித்து கொல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை?
தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்த சிறுத்தை; அடித்து கொல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை?
ADDED : ஜன 10, 2024 10:39 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே, 'ரிச்மவுண்ட்' தனியார் தேயிலை தோட்டத்தில், தலையில் படுகாயத்துடன் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
வனச்சரகர் சஞ்சீவி, வனவர்கள் பாலகிருஷ்ணன், சுரேஷ்குமார், பெலிக்ஸ் தலைமையிலான குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தேயிலை செடிகளுக்கு இடையே, தலையில் காயத்துடன் சிறுத்தை உயிர் இழந்து கிடந்தது தெரிய வந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர், உயிரிழந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'உயிரிழந்தது ஆறு மாதம் வயதுடைய ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சிறுத்தை உயிரிழந்ததற்கான முழுமையான காரணம் தெரியவரும்,' என்றனர்.
தற்போது, சிறுத்தை மனிதர்களை தாக்கி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை காயத்துடன் உயிரிழந்து கிடந்தது வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாராவது தாக்கி கொன்றார்களா என்பது குறித்து தனியார் தோட்ட நிர்வாகத்தினரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.