/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குன்னுாரில் மழை நின்ற பின்பும் மண் சரிவால் தொடரும் பாதிப்புகுன்னுாரில் மழை நின்ற பின்பும் மண் சரிவால் தொடரும் பாதிப்பு
குன்னுாரில் மழை நின்ற பின்பும் மண் சரிவால் தொடரும் பாதிப்பு
குன்னுாரில் மழை நின்ற பின்பும் மண் சரிவால் தொடரும் பாதிப்பு
குன்னுாரில் மழை நின்ற பின்பும் மண் சரிவால் தொடரும் பாதிப்பு
ADDED : ஜன 12, 2024 11:27 PM

குன்னுார்:குன்னுார் டென்ட்ஹில் சாலை மகளிர் காவல் நிலையம் அருகே ஏற்பட்ட மண்சரிவால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் மேகமூட்டத்துடன் கன மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பகலில் வெயில் மற்றும் இரவில் பனியின் தாக்கம் துவங்கியுள்ளது. இந்நிலையில், குன்னுார் டென்ட்ஹில் மகளிர் காவல் நிலையம் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. ஓட்டுப்பட்டறை சாலையில் புதர்களுடன் மண் கிடப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இவ்வழியாக அரசு துறையினர் பலர் சென்ற போதும் அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போல, டி.டி.கே., சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சி.எஸ்.ஐ., பள்ளியின் ஒரு பகுதியில் கல்சுவர் இடிந்து விழுந்தது. மழை நின்ற பிறகும் மண்சரிவு பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.