/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சுற்றுலா பயணிகளை கவரும் காட்டிமட்டம் அருவி சுற்றுலா பயணிகளை கவரும் காட்டிமட்டம் அருவி
சுற்றுலா பயணிகளை கவரும் காட்டிமட்டம் அருவி
சுற்றுலா பயணிகளை கவரும் காட்டிமட்டம் அருவி
சுற்றுலா பயணிகளை கவரும் காட்டிமட்டம் அருவி
ADDED : செப் 14, 2025 10:13 PM

பந்தலுார்; பந்தலூர் அருகே, இரண்டாம் சிரப்புஞ்சி எனப்படும் தேவாலா பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் மாவட்டத்தில் அதிளவில் மழையும், குளிரும் நிலவுவது வழக்கம்.
அதனால், இப்பகுதிக்கு, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மலை தொடர்கள், மேக மூட்டத்திற்கு மத்தியில் காணப்படும் தேயிலை தோட்டங்கள், ஆங்கிலேயர் காலத்திய சுரங்கப்பாதைகள் ஆகியவற்றை பார்த்து ரசித்து செல்கின்றனர். இவற்றிற்கு மத்தியில் சாலையோர வனப்பகுதிகளில், காணப்படும் அருவிகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதில், காட்டி மட்டம் கிராமம் மற்றும் அழகிய வனத்திற்கு மத்தியில் காணப்படும் அருவியை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இந்த பகுதியில் அட்டை பூச்சிகள் அதிக அளவில் உள்ளதால் கவனத்துடன் பார்த்து, ரசித்து செல்ல வேண்டும். வெள்ளத்தில் இறங்குவதை தவிர்க்க வேண்டும்,' என் றனர்.