/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கேத்தி சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் ;வேகத்தடை அமைப்பது அவசியம்கேத்தி சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் ;வேகத்தடை அமைப்பது அவசியம்
கேத்தி சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் ;வேகத்தடை அமைப்பது அவசியம்
கேத்தி சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் ;வேகத்தடை அமைப்பது அவசியம்
கேத்தி சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் ;வேகத்தடை அமைப்பது அவசியம்
ADDED : ஜன 28, 2024 11:42 PM

குன்னூர்;குன்னூர் கேத்தி பாலாடா சாலையில் அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் கேத்தி பாலாடாவிற்கு தினமும் கேரட் மூட்டைகள், லாரிகளில் கொண்டுவரப்பட்டு கேரட் கழுவி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.
இதே போல இங்குள்ள தனியார் கல்லூரிக்கும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இந்த சாலையில் வேகத்தடை அமைக்காத காரணத்தால், இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன.
பல இடங்களிலும் வளைவான பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. டிரைவர்களுக்குள் தகராறும் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் இறுதியில் . இங்கு பைக்கில் வந்த கல்லூரி மாணவர்கள் லாரியில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.
பொதுமக்கள் கூறுகையில், ' இந்த சாலையில் கல்லூரியில் இருந்து பாலாடா வரையிலான சாலையில். அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலை துறைகளுக்கு புகார்கள் தெரிவித்தோம் இதுவரை இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெரிய விபத்துக்கள் நடக்கும் முன்பு குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம், என்றனர்.