மழை நீர் வரத்து அணைக்கு அதிகரிப்பு
மழை நீர் வரத்து அணைக்கு அதிகரிப்பு
மழை நீர் வரத்து அணைக்கு அதிகரிப்பு
ADDED : ஜன 05, 2024 01:49 AM
கூடலுார்;முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கடந்தாண்டு டிச. 23ல் 141 அடியை எட்டியது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக இருந்தது.
நேற்று முன்தினம் இரவு தேக்கடியில் 71.2 மி.மீ., பெரியாறில் 49 மி.மீ., மழை பெய்தது. இதனால் 393 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1284 கன அடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.