Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கடும் போக்குவரத்து நெரிசல்; வாகன நிறுத்துமிடம் அவசியம்

கடும் போக்குவரத்து நெரிசல்; வாகன நிறுத்துமிடம் அவசியம்

கடும் போக்குவரத்து நெரிசல்; வாகன நிறுத்துமிடம் அவசியம்

கடும் போக்குவரத்து நெரிசல்; வாகன நிறுத்துமிடம் அவசியம்

ADDED : ஜன 08, 2024 11:49 PM


Google News
ஊட்டி:கோத்தகிரியில் வாகன நிறுத்துமிடம் அமைக்க கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

கோத்தகிரியில் மக்கள் தொகை, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெளியூர் மற்றும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த முடியாததால் உள்ளூர் வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. திருவிழா, பண்டிகை, அரசியல் கூட்டங்கள் நடத்தும்போது பெரும் நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, கோத்தகிரி பகுதியில் புதிய நுாலகம், தாசில்தார் அலுவலகம், மார்க்கெட் பகுதியில் இருந்து பஸ் நிலையம் செல்லும் இடம், அரசு மருத்துவமனை கீழ் பகுதி, காவலர் குடியிருப்பு எதிர்புறம், சக்தி மலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த இடங்களை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us