/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மலை மாவட்ட மக்களை அச்சுறுத்திய கனமழை; அடிக்கடி தொடரும் மின் தடையால் பாதிப்பு மலை மாவட்ட மக்களை அச்சுறுத்திய கனமழை; அடிக்கடி தொடரும் மின் தடையால் பாதிப்பு
மலை மாவட்ட மக்களை அச்சுறுத்திய கனமழை; அடிக்கடி தொடரும் மின் தடையால் பாதிப்பு
மலை மாவட்ட மக்களை அச்சுறுத்திய கனமழை; அடிக்கடி தொடரும் மின் தடையால் பாதிப்பு
மலை மாவட்ட மக்களை அச்சுறுத்திய கனமழை; அடிக்கடி தொடரும் மின் தடையால் பாதிப்பு

குன்னுார்
குன்னுார் அருகே கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ராட்சத கற்பூர மரம் சாலையில் விழுந்தது. தகவலின் பேரில் குன்னுார் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று, மரங்களை நீண்ட நேரம் போராடி வெட்டினர். தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் மரங்களை கயிறு கட்டி இழுத்து தள்ளி சாலையோரம் ஒதுக்கினர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
கோத்தகிரி
கோத்தகிரி- ஊட்டி இடையே, மைனலா சந்திப்பு பகுதியில், 20க்கும் மேற்பட்ட, அபாய மரங்கள், போதிய வேர்பிடிப்பு இல்லாமல் உள்ளன. காற்றுடன் பலத்த மழை பெய்யும் பட்சத்தில், மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிப்பு உட்பட அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. அபாய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது வேண்டும்.
கூடலுார்
கூடலுார் ஓவேலி சாலை பாலவாடி அருகே, காலை, 11:00 மணிக்கு சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து, மின்கம்பம் சேதமடைந்து, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். ஆமைக்குளம் பகுதியில், மின் கம்பி மீது மரம் விழுந்தது. மின் சப்ளை பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.