/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சான்றிதழ் பயிற்சி; விண்ணப்பம் வரவேற்பு சான்றிதழ் பயிற்சி; விண்ணப்பம் வரவேற்பு
சான்றிதழ் பயிற்சி; விண்ணப்பம் வரவேற்பு
சான்றிதழ் பயிற்சி; விண்ணப்பம் வரவேற்பு
சான்றிதழ் பயிற்சி; விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 26, 2025 04:41 AM
ஊட்டி; மாநில அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கடந்த ஆண்டு முதல் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்பு நடத்தி வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கல்வி பயின்று வருகின்றனர். நடப்பாண்டு ஜூன் மாதம் துவங்க உள்ள பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்ட செய்தி குறிப்பு: பாடத்திட்டம் மேம்பாடு மற்றும் நிபுணர்களின் பயிற்சி மூலம் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://www.editn.in/web-one-Year-Registration என்ற ஆன்லைன் முகவரியில், தொழில் முனைவோராக ஆர்வமுள்ள இளைஞர்கள் விண்ணப்பித்து, சேர்ந்து பயனடையலாம்.
21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., யில் தொழிற்கல்வி பயிற்சி முடித்தவர்கள் சேரலாம். கல்வி கட்டணத்திற்கான வங்கி கடன் வசதிகளும்செய்து தரப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு, 8668101638என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.