/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இலவச மின் இணைப்பு கோரி மாற்றுத்திறனாளி பெண் மனுஇலவச மின் இணைப்பு கோரி மாற்றுத்திறனாளி பெண் மனு
இலவச மின் இணைப்பு கோரி மாற்றுத்திறனாளி பெண் மனு
இலவச மின் இணைப்பு கோரி மாற்றுத்திறனாளி பெண் மனு
இலவச மின் இணைப்பு கோரி மாற்றுத்திறனாளி பெண் மனு
ADDED : பிப் 05, 2024 10:59 PM

ஊட்டி;இலவச மின் இணைப்பு கோரி மாற்று திறனாளி பெண் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
மசினகுடி பகுதியை சேர்ந்த நீலம்மா கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
மாற்றுத்திறனாளியான நான் எனது தாயாருடன் மசினகுடி அருகே வாழை தோட்டத்தில் கடந்த, 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். மாநில அரசின் இலவச மின்சாரம் கேட்டு மின்வாரியத்திடம் விண்ணப்பம் கொடுத்துள்ளேன்.
இதுவரை இலவச மின்சார இணைப்பு வழங்கவில்லை. மாநில அரசின் இலவச மின் இணைப்பு வழங்க தாங்கள் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பார்த்த கலெக்டர் உரிய விசாரணை நடத்த கோரி உத்தரவிட்டார்.