/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த ஜி.பி.எஸ்., 'சர்வே'தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த ஜி.பி.எஸ்., 'சர்வே'
தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த ஜி.பி.எஸ்., 'சர்வே'
தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த ஜி.பி.எஸ்., 'சர்வே'
தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த ஜி.பி.எஸ்., 'சர்வே'
ADDED : ஜன 24, 2024 11:51 PM

கூடலுார் : கூடலுார் தொரப்பள்ளி முதல் ஊசிமலை வரை தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்தும் வகையில், 'ஜி.பி.எஸ்., சர்வே' பணி நடந்து வருகிறது.
கூடலுார் - ஊட்டி -தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அனுமாபுரம் ஊசிமலை வரையிலான 16 கி.மீ., துாரசாலையை, 70 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தி சீரமைக்கு பணி துவங்கி நடந்து வருகிறது. 'இப்பணிகள் கோடை சீசனுக்கு முன் நிறைவுபெறும்,' என, எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, ஊசிமலை முதல் கூடலுார் தொரப்பள்ளி வரையிலான சாலை சீரமைப்பு பணிகள் துவங்கப்பட உள்ளது. இதற்காக தொரப்பள்ளி -ஊசிமலை வரை ஜி.பி.எஸ்., 'சர்வே' பணிகளை, தேசிய நெடுஞ் சாலைத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இப்பணியை தொடர்ந்து சாலை மேம்பாட்டு குறித்து திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'ஜி.பி.எஸ்., மூலம் மேற்கொள்ளப்படும் சர்வேயில், சாலையின் தற்போதைய அகலம் மற்றும் அகலப்படுத்த வேண்டிய பகுதி, சாலையில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள், இணைப்பு சாலைகளின் விவரம், பாலம் மற்றும் மழை நீர் வடிகால்வாய் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் சாலை மேம்பாட்டு குறித்து திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்,' என்றனர்.