/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குப்பைகளுக்கு தீ; புகையினால் வாகன ஓட்டிகள் அவதிகுப்பைகளுக்கு தீ; புகையினால் வாகன ஓட்டிகள் அவதி
குப்பைகளுக்கு தீ; புகையினால் வாகன ஓட்டிகள் அவதி
குப்பைகளுக்கு தீ; புகையினால் வாகன ஓட்டிகள் அவதி
குப்பைகளுக்கு தீ; புகையினால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 25, 2024 12:08 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையோரங்களில் தேங்கியுள்ள குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால் ஏற்படும் புகை மூட்டத்தால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதனிடையே மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரங்களில் உள்ள குப்பை தொட்டிகளில், குப்பை தேக்கமடைந்து, நிரம்பி உள்ளது. அவ்வாறு தேக்கமடைந்துள்ள குப்பைகளை, ஊராட்சி நிர்வாகம் முறையாக அகற்றுவது இல்லை. இதனால் சில மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். குப்பைகளுக்கு தீ வைப்பதால், அதனால் ஏற்படும் புகை சாலை முழுவதும் பரவி, ஊட்டி சாலையில் பயணிப்பவர்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.
இந்த குப்பைகளால் ஏற்படும் புகை அருகில் உள்ள வனப்பகுதிகளிலும் மாசு ஏற்படுத்துகிறது. இதனால் வனவிலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுகிறது.
இவ்வாறு குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும், முறையாக குப்பைகளை அகற்றி அதை மறுசுழற்சி செய்ய வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.---