ADDED : ஜன 28, 2024 11:22 PM

சூலுார்:சூலுார் அருகே சரக்கு ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்த, ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா வியாபாரியை கைது செய்தனர்.
சூலுார் எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத்துக்கு, கிடைத்த ரகசிய தகவலின் படி, நீலம்பூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அதில், சரக்கு ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்த, ஐந்து கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்டோவில் வந்த இருகூர் அண்ணா நகரை சேர்ந்த நாகராஜ், 47, என்பவரை. போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், நாகராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.