/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானைகள் சாலையை கடந்து செல்லும் பகுதி; வாகன ஓட்டுனர்களுக்கு வனத்துறை அறிவுரை யானைகள் சாலையை கடந்து செல்லும் பகுதி; வாகன ஓட்டுனர்களுக்கு வனத்துறை அறிவுரை
யானைகள் சாலையை கடந்து செல்லும் பகுதி; வாகன ஓட்டுனர்களுக்கு வனத்துறை அறிவுரை
யானைகள் சாலையை கடந்து செல்லும் பகுதி; வாகன ஓட்டுனர்களுக்கு வனத்துறை அறிவுரை
யானைகள் சாலையை கடந்து செல்லும் பகுதி; வாகன ஓட்டுனர்களுக்கு வனத்துறை அறிவுரை
ADDED : செப் 15, 2025 09:03 PM

கூடலுார்; 'கூடலுார் - கோழிக்கோடு சாலையை இரவு மற்றும் காலை நேரத்தில் காட்டு யானைகள் கடந்து செல்வதால், ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலுார், ஓவேலி, குண்டம்புழா வனப்பகுதிகளில் உலாவரும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் பாண்டியர் டான்டீ தேயிலை தோட்டம் வழியாக வருகின்றன. பின், இரும்புபாலம், பால்மேடு, மரப்பாலம், ஆமைக்குளம் வழியாக சாலையை கடந்து ஆமைக்குளம் மற்றும் புளியம்பாறை கிராமங்களுக்கு சென்று விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. வன ஊழியர்கள், யானைகளை கண்காணித்து விரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், பால்மேடு பகுதியில் சாலையை கடக்க முயன்ற யானையிடமிருந்து, பைக்கில் வந்த கேரளா சுற்றுலா பயணிகள் இருவர் நுாலிழையில் உயிர் தப்பினர். இதை தொடர்ந்து, 'காட்டு யானைகள் சாலையை கடக்கும் பகுதிகளில், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என, வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இது போன்ற, சூழல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, யானைகள் சாலையை கடக்கும் பகுதிகளில், ஓட்டுனர்கள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்கும் வகையில், இரவு நேரத்தில் வாகன லைட் வெளிச்சத்தில், பிரதிபலிக்க கூடிய வகையிலான, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்,' என்றனர்.