/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் நுழைந்த தி.மு.க.வினர்; குன்னுாரில் திடீர் பரபரப்பு அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் நுழைந்த தி.மு.க.வினர்; குன்னுாரில் திடீர் பரபரப்பு
அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் நுழைந்த தி.மு.க.வினர்; குன்னுாரில் திடீர் பரபரப்பு
அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் நுழைந்த தி.மு.க.வினர்; குன்னுாரில் திடீர் பரபரப்பு
அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் நுழைந்த தி.மு.க.வினர்; குன்னுாரில் திடீர் பரபரப்பு
ADDED : செப் 15, 2025 09:03 PM

குன்னுார்; அண்ணா பிறந்தநாள் விழாவில், குன்னுாரில் நடந்த அ.தி.மு.க.,வினரின் பொதுக்கூட்டத்தில் நுழைந்த தி.மு.க.,வினர், ஒலிபெருக்கியை நிறுத்த கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது.
குன்னுார் மவுன்ட் ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு நேற்று காலை,அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து, அருகில் வி.பி., திடலில் பொதுக்கூட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க காத்திருந்தனர். அரசு கொறடா ராமச்சந்திரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
அப்போது, அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய சிலர் நகராட்சியில் நடக்கும் தி.மு.க., ஊழல் குறித்தும், அரசு கொறடாவையும் விமர்சித்து பேசினர்.
அப்போது கோபமான, மாவட்ட செயலாளர் ராஜூ ஆதரவாளர்கள் செல்வம், கோவர்த்தனன், பாரூக் உட்பட தி.மு.க.,வினர் சிலர், அ.தி.மு.க.,வினரின் பொதுக்கூட்டத்திற்கு சென்று, ஒலிபெருக்கியை நிறுத்துமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுத்து அனுப்பி வைத்தனர்.
அதன்பின், தி.மு.க., வினர் அண்ணா பிறந்த நாள் உறுதிமொழி எடுக்கும் வரை ஒலிபெருக்கியை நிறுத்தினர். அப்போது, தி.மு.க.,வின் முன்னாள் மாவட்ட செயலாளர் முபாரக் வந்தார். அதற்கு முன்பே, அரசு கொறடா அண்ணா சிலைக்கு மாலை இட்ட சம்பவம் தொடர்பாக, கட்சியினர் மத்தியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் அனைவரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி எடுத்து, இனிப்பு வழங்கி சென்றனர்.