Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாவட்டத்தில் தரமற்ற உணவை கண்டறிய... ஐந்து சிறப்பு குழு! சீசனுக்கு முன்பாக ஆய்வை துவக்க முடிவு

மாவட்டத்தில் தரமற்ற உணவை கண்டறிய... ஐந்து சிறப்பு குழு! சீசனுக்கு முன்பாக ஆய்வை துவக்க முடிவு

மாவட்டத்தில் தரமற்ற உணவை கண்டறிய... ஐந்து சிறப்பு குழு! சீசனுக்கு முன்பாக ஆய்வை துவக்க முடிவு

மாவட்டத்தில் தரமற்ற உணவை கண்டறிய... ஐந்து சிறப்பு குழு! சீசனுக்கு முன்பாக ஆய்வை துவக்க முடிவு

ADDED : ஜன 16, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
ஊட்டி:நீலகிரியில், தரமற்ற உணவு விற்பனையை கண்டறிய, ஐந்து சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், சர்வதேச சுற்றுலா தலமாக இருப்பதால் ஆண்டுக்கு சராசரியாக, 30 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசன், வார நாட்கள், தொடர் விடுமுறை சமயங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கிறது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, 'தங்கும் விடுதிகள், உணவு வகைகளில் கட்டண உயர்வு, தரமற்ற உணவுகளை தடுப்பதும், எவ்வித குறைபாடும் இருக்கக் கூடாது. குறிப்பாக, உணவு பாதுகாப்பு துறையினர் ஓட்டல், இறைச்சி, மீன் கடைகள், தேனீர், பேக்கரி கடைகளில், கெட்டு போன பொருட்கள், காலாவதியான பொருட்கள் குறித்து திடீர் ஆய்வு செய்ய வேண்டும்.

தவிர, தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம் சாலைகளில் விற்கப்படும் தேன், தைலம் விற்பனை உள்ளிட்டவைகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பி கண்காணித்து வருகிறது.

சிறப்பு குழு அமைப்பு


குறிப்பாக, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் ஐந்து சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.

இந்த குழு எந்நேரத்திலும் திடீர் சோதனையில் ஈடுபட்டு விதிமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளது. நடப்பாண்டு சீசனுக்கு முன்பாக, மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக, அனைத்து இடங்களிலும் ஆய்வை துவக்க உள்ளது.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், ''நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், உணவு விஷயத்தில் தனி கவனம் செலுத்தும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், நடப்பாண்டு சீசனுக்கு முன்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

''தற்போது இதற்கென ஐந்து சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திடீர் சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விற்பனை கடைகளில் உணவில் ஏதாவது குறை இருந்தால் உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணிகள், 94440-42322 என்ற 'வாட்ஸ் அப்' எண்ணில் புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us