/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கூட்டுறவு இயக்க தந்தை நிக்கல்சன் 179வது பிறந்த நாள் விழா; கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை கூட்டுறவு இயக்க தந்தை நிக்கல்சன் 179வது பிறந்த நாள் விழா; கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை
கூட்டுறவு இயக்க தந்தை நிக்கல்சன் 179வது பிறந்த நாள் விழா; கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை
கூட்டுறவு இயக்க தந்தை நிக்கல்சன் 179வது பிறந்த நாள் விழா; கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை
கூட்டுறவு இயக்க தந்தை நிக்கல்சன் 179வது பிறந்த நாள் விழா; கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை
ADDED : செப் 21, 2025 10:43 PM

குன்னுார்; இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை 'சர் பிரடெரிக்' நிக்கல்சனின், 179வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
'இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை,' என, அழைக்கப்படும் 'சர் பிரடெரிக்' நிக்கல்சன் பிறந்த நாள் விழா, நிக்கல்சன் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், கேக் வெட்டி, கொண்டாடப்பட்டது. முன்னதாக, குன்னுாரில் உள்ள அவரது கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா பேசுகையில்,''நாட்டில் ஏழை எளிய மக்கள் விவசாயிகள் நலனுக்காக செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் உருவாக காரணமானவர் சர் பிரடெரிக் நிக்கல்சன் இங்கிலாந்தில், 1846ம் ஆண்டு செப்., 20ல் பிறந்தார். இந்திய சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கோவை, மதுரை, திருநெல்வேலி உட்பட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார்,'' என்றார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார், கூட்டுறவு சார்பதிவாளர்கள் ரவிக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பண்டகசாலை மேலாளர் ரவி உட்பட பலர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.