/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பெண்களுக்கு எதிரான கொடுமைகளை வெளிக்கொண்டுவர விழிப்புணர்வு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை வெளிக்கொண்டுவர விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை வெளிக்கொண்டுவர விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை வெளிக்கொண்டுவர விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை வெளிக்கொண்டுவர விழிப்புணர்வு
ADDED : செப் 21, 2025 10:43 PM

பந்தலுார்; பெண்களுக்கு எதிரான கொடுமைகளை வெளிக்கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
பந்தலுார் வட்ட சட்ட பணிகள் குழு, சமூக நலத்துறை இணைந்து பெண்களுக்கான, 'மிஷன் சக்தி' எனும் தலைப்பிலான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை பந்தலுாரில் நடத்தின. சட்டப்பணிகள் குழு பணியாளர் ஷாலினி வரவேற்றார்.
வக்கீல் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், ''பெண்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு சட்டங்கள் உள்ளதோ, அந்த அளவிற்கு கொடுமைகளும் அதிகரித்து வருகிறது. 'சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் ரீதியிலான தொல்லைகள், குடும்பங்களில் கணவன் மற்றும் அவர்களின் குடும்ப நபர்களின் பல்வேறு வகையான கொடுமைகள்,' என, பாதிப்புகள் உள்ளது.
பெண்களுக்கு எதிரான எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும், அரசு மற்றும் சட்டங்கள், இலவசமாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், நடவடிக்கை எடுக்கவும் முன் வரும்.
பெண்கள் தங்களுக்கு எதிரா ன அல்லது குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் ஏற்படும் போது, அதனை வெளியில் கூற முன் வரவேண்டும். அதற்கான ஆ லோசனைகள் வழங்க நீதிமன்றத்தில் இலவச சட்டப் பணிகள் குழு பணியாளர்கள் உள்ளதால், அதனைப் பயன்படுத் திக் கொள்ள வேண்டும்,''என்றார். சமூக நலத்துறை பணியாளர் குமார் பேசுகையில், ''பெண்கள் பணி புரியும் இடங்களில், அவர்களுக்கான பாதுகாப்பு குழுவை உருவாக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் கூட்டங்கள் நடத்தி, ஏதேனும் பிரச்னைகள் மற்றும் பாதிப்புகள் இருந்தால் அதனை சமூகநலத்துறைக்கு தெரிவித்து உரிய தீர்வு காணலாம்.
அதேபோல், அதிகரிக்கும் குழந்தை திருமணங்களையும் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு சமுதாயத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், சட்டத்துறை மற்றும் சமூக நலத் துறையை நாடி வெளியே தீர்வு காணலாம்,'' என்றார்.
நிகழ்ச்சியில் தனியார் மருத்துவமனை டாக்டர் மற்றும் ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் பங்கேற்றனர்.