/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சோதனை முறையில் ஓட்ஸ், கோதுமை உற்பத்திசோதனை முறையில் ஓட்ஸ், கோதுமை உற்பத்தி
சோதனை முறையில் ஓட்ஸ், கோதுமை உற்பத்தி
சோதனை முறையில் ஓட்ஸ், கோதுமை உற்பத்தி
சோதனை முறையில் ஓட்ஸ், கோதுமை உற்பத்தி
ADDED : ஜன 05, 2024 11:36 PM

கூடலுார்;கூடலுாரில் புதிய முயற்சியாக சோதனை முறையில் கோதுமை, ஓட்ஸ் பயிரிட்டுள்ளனர்.
கூடலுார் பகுதியில் நீண்டகால பயன் தரும் தேயிலை, காபி, குறுமிளகு, பாக்கு, ஏலக்காய் மற்றும் குறுகிய கால பயன் தரும் நெல், நேந்திரன் வாழை, இஞ்சி மற்றும் காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை வேளாண் பல்கலைக்கழகம் மூலம், செயல்பட்டு வரும், 'கிரிசி வித்யா கேந்திரா, சாலிடர் சிவில் சொசைட்டி,' சார்பில் புதிய முயற்சியாக கோதுமை, ஓட்ஸ் விவசாயம் செய்வது குறித்து கடந்த மாதம் விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து, மரப்பாலம் பகுதியில் சோதனை முறையில் கோதுமை மற்றும் ஓட்ஸ் பயிரிடப்பட்டது.
தற்போது, அவைகள் நல்ல நிலையில் வளர்ந்திருப்பது புதிய நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.
விவசாய பயிற்றுனர்கள் ஆரோக்கியசாமி, மணிகண்டன் ஆகியோர் கூறுகையில், ''வயல்கள், மற்றும் விவசாய தோட்டங்களில் புதிய மாற்று பயிராக இயற்கை முறையில் கோதுமை, ஓட்ஸ் உற்பத்தி செய்து அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதற்கு குறைந்த அளவு தண்ணீர் இருந்தால் போதுமானது. நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. விவசாயிகளையும் கோதுமை, ஓட்ஸ் உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்தும் முயற்சிகளை எடுத்துள்ளோம்,'' என்றனர்.