/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் காயம் பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் காயம்
பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் காயம்
பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் காயம்
பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் காயம்
ADDED : மே 29, 2025 11:09 PM
ஊட்டி,;ஊட்டி அருகே, சீரமைப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி, 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஊட்டி அருகே உள்ள பர்ன்ஹில் பேலஸ் பகுதியில் மரங்கள் விழுந்து மின்கம்பிகள் அறுந்த நிலையில், அதனை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, கடலுார் பண்ருட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல், 26. ஊட்டி பெர்ன்ஹில் பகுதியை சேர்ந்த ராஜேஷ்,38, ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு ஊட்டி அரசு மருத்துவக் கல்லுார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஊட்டி ஜி-1 போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.