/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ரேஷன் கடையில் சூறை கரும்பை ருசித்த யானைகள்ரேஷன் கடையில் சூறை கரும்பை ருசித்த யானைகள்
ரேஷன் கடையில் சூறை கரும்பை ருசித்த யானைகள்
ரேஷன் கடையில் சூறை கரும்பை ருசித்த யானைகள்
ரேஷன் கடையில் சூறை கரும்பை ருசித்த யானைகள்
ADDED : ஜன 11, 2024 01:49 AM

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் நான்சச் பகுதியில் கடந்த 4 நாட்களாக, 8 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இங்குள்ள பள்ளியை துவம்சம் செய்த காட்டு யானைகள், அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை உட்கொண்டு சென்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் அந்த கிராமத்திற்கு வந்த யானைகள், ரேஷன் கடையை உடைத்தன.
உள்ளே இருந்த இரண்டு கட்டு கரும்பை ருசித்தன. பல கரும்பு கட்டுகளை சேதப்படுத்தி திரும்பின.
வனத்துறையினர் பல மணி நேரம் போராடி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.
அந்த யானைகள், கிளண்டேல் வழியாக காலையில் ரன்னிமேடு வந்தன. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.