/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பாக்கு மரத்தை உடைத்த யானை: குடியிருப்பு சேதம்பாக்கு மரத்தை உடைத்த யானை: குடியிருப்பு சேதம்
பாக்கு மரத்தை உடைத்த யானை: குடியிருப்பு சேதம்
பாக்கு மரத்தை உடைத்த யானை: குடியிருப்பு சேதம்
பாக்கு மரத்தை உடைத்த யானை: குடியிருப்பு சேதம்
ADDED : ஜன 24, 2024 11:49 PM
பந்தலுார், : பந்தலுார் இரும்பு பாலம் பகுதியில் குடியிருப்பவர் அம்மணி. இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்த ஒற்றை யானை பாக்கு மரத்தை உணவுக்காக உடைத்துள்ளது.
அதில், பாக்கு மரம் குடியிருப்பு மீது விழுந்ததில் குடியிருப்பின் மேல் கூரை சேதம் அடைந்தது. வீட்டினுள் உறங்கியவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட குடியிருப்பை வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனக்குழுவினர் ஆய்வு செய்தனர். 'பாதிக்கப்பட்ட குடியிருப்புக்கு நிவாரணம் வழங்கப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.